‘அடங்காத அசுரன்’ - இன்று வெளியாகிறது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் First single!

தனுஷின் ராயன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல், இன்று வெளியாகிறது.
ராயன்
ராயன்pt web

கேப்டன் மில்லர் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் 50ஆவது திரைப்படமாக ராயன் உருவாகியுள்ளது. இதனை அவரே இயக்கியுள்ளார். வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ராயன் திரைப்படம்
ராயன் திரைப்படம்

இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ராயன் திரைப்படத்திலிருந்து, 'அடங்காத அசுரன்' என ஆரம்பிக்கும் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார்.

ராயன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 37 | ‘நான் பெத்த மகனே’ மனோரமா | மிகையான அன்பும் மனச்சிக்கலே!

பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. அடுத்த மாதம் ராயன் திரைப்படம், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயன் திரைப்ப்டம்
ராயன் திரைப்ப்டம்

தனுஷ் தனது 51 ஆவது திரைப்படமாக சேகர் கம்முளா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

குபேரா திரைப்படம்
குபேரா திரைப்படம்

அப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com