மேற்குவங்கத்தில் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்ந்த நிலையில் மம்தா பானர்ஜி பெலகாட்டாவிலுள்ள காந்திபவனிலிருந்து, கொல்கத்தாவின் போபஜார் வரை பிரமாண்டமான பேரணியை நடத்தினார்.
எட்டுக்கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் மேற்குவங்கத்தில், நாளை மறுநாள் ஏப்ரல் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 22இல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் 4ம் கட்ட வாக்குப்பதிவின்போது கூச் பெகார் வாக்குச்சாவடியில் நடந்த வன்முறையில் சிஐஎஸ்எப் வீரர்களால் பொதுமக்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்த அனல்பறக்கும் பிரச்சாரங்களில் மம்தா பானர்ஜிக்கு ஒருநாள் பிரச்சார தடை தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டது, இதனை எதிர்த்து மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.
மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி என மூன்று முனை போட்டி நிலவுகிறது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு