Published : 13,Apr 2021 08:31 PM

தனுஷ் ’நடிப்பு கர்ணன்’! - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Dhanush-s--nadippu-Karnan------karthik-subbaraj--praises-Karnan-film-

’கர்ணன்’ படம் பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை ’நடிப்பு கர்ணன்’ என்று பாராட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கர்ணன்’ படம் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருவதோடு கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி ‘கர்ணன் அருமையான படம்’ என்று பாராட்டியிருந்தார். அதேபோல இயக்குநர் ராஜு முருகன் “ ‘கர்ணன்’ நமக்கான படம். இந்த மண்ணின் கதை. எம் மக்களின் வதை. அதை தரமான, அறமான சினிமாவாக்கியிருக்கும் தோழன் மாரி செல்வராஜுக்கு இன்னொருமுறை இதயத்தின் முத்தங்கள்” என்று பாராட்டினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி எம்.பி “கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை,வலியை, எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும்,குறியீடுகளும் நிறைய. சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்” என்று பாராட்டியிருந்தார்.

image

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “கர்ணன் படத்தின் உண்மை தன்மை வலிமிகுந்ததாக இருந்தது. தனுஷ் இன்னும் எவ்வளவு திறமைகளை தன்னுள் சேர்த்து வைத்திருக்கிறாரோ? ’நடிப்பு கர்ணா’ ” என்று தனுஷின் நடிப்பையும் மொத்தப் படக்குழுவையும் வாழ்த்தி பாராட்டி இருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்