Published : 02,Apr 2021 07:48 PM
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் குறித்த பேச்சு: உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

மேற்குவங்க முதல்வர் மம்தா, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜிமீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் குறித்து உதயநிதி அவதூறாக பேசியதாக பாஜக புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.