Published : 22,Jul 2017 04:17 PM

ஐபிஎல் தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் நியமனம்

Heming-appointed-as-IPL-chief-executive

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமினை பிசிசிஐ நியமித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக பிசிசிஐ அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் ஹேமங் அமின், தற்போது நிதி பிரிவு துணை பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஐபிஎல் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஹேமங் அமின், பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரியின் கீழ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமங் அமினுக்கு, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பிசிசிஐ நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல்ராஜஸ்தான் அணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்க்கப்பட்டுள்ள நிலையில், தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்