இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், தான் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியத்தை புத்தாண்டு பரிசாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கினார்.
பிரம்மானந்தம் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிக படங்களில் நடித்துள்ளார். அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ரவி தேஜா உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். அத்துடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழி திரைப்படத்தில் பிரம்மானந்தம் நடித்த காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிக படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனை விருதினையும் பிரம்மானந்தம் பெற்றுள்ளார். மேலும் கூடுதல் திறனாக ஓவியம் வரைவதையும் மேற்கொண்டு வருகிறார்.
THE MOST PRICELESS GIFT I RECEIVED FROM OUR BELOVED
BRAHMANANDAM GARU.
45 DAYS OF WORK .
HAND DRAWN PENCIL SKETCH . THANK YOU ?? pic.twitter.com/DNvGd3iv3B— Allu Arjun (@alluarjun) January 1, 2021Advertisement
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பிரம்மானந்தம், தான் பென்சிலில் வரைந்த வெங்கடாஜலபதி புகைப்படத்தை தெலுங்கு முன்னனி நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பரிசளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அல்லு அர்ஜூன் “எனது அன்பான பிரம்மானந்தம் காருவிடம் இருந்து விலைமதிப்பில்லா பரிசை பெற்றுள்ளேன். 45 நாட்கள் வேலை. கையால் பென்சிலில் வரையப்பட்ட ஓவியம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!