Published : 12,Jul 2017 05:06 PM

கலாம் சாட் மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சம்

Rs-10-Lakhs-for-Kalam-SAT-Students

கலாம் சாட் என்ற பெயரில் மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிய கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வ‌ழங்கினார்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழு மிகச்சிறிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியது. அதற்கு இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமின் நினைவாக "கலாம் சாட்" என்ற பெயரை வைத்திருந்தனர். இந்த செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த மாதம் விண்ணில் செலுத்தியது. விண்ணில் பாய்ந்துள்ள கலாம் சாட் செயற்கைக்கோள் வானிலை, கதிர்வீச்சு, வெப்பம் ஆராய்ச்சி ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கலாம் சாட் என்கிற பெயரில் மிகச் சிறிய செயற்கைக் கோளை உருவாக்கி சாதனை படைத்த ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரிடமிருந்து மாணவர் குழுவினர் காசோலையை பெற்றுக்கொண்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்