[X] Close

அமிதாப், நாகர்ஜுனா, ஆலியா பட் நடித்துள்ள 'பிரம்மாஸ்த்ரா'; டிச. 4இல் தமிழில் வெளியீடு!

சினிமா

Brahmastra-starring-Amitabh--Alia-Bhatt--Ranbir-Kapoor--Release-in-Tamil-

அமிதாப் பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர், நடிக்கும் பாலிவுட் படமான “பிரம்மாஸ்த்ரா” வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாவதையொட்டி இந்தி மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும் என்று தற்போது அறித்திருப்பதால் எதிர்ப்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.


Advertisement

கரண் ஜோகர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாஸ்திரா மூன்று பாகங்களாக வெளியாகவிருக்கிறது. 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது.

image


Advertisement

தயாரிப்பாளர் குழுவின் நிர்வாகி  சங்கர் இப்படம் குறித்து பேசும்போது, “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இதுவரை இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறினார். படத்தின் பட்ஜெட் 300 கோடி என்று பரவும் வதந்திகள் குறித்து கேட்டபோது, உங்களிடம் ஒன்றை சொல்கிறேன் இப்படம் அதனையும் தாண்டிய பெரிய பட்ஜெட் படம் என்றார். மேலும் அவர் கூறியபோது இந்த வகையில் உருவாகும் பிரமாண்ட படம் எதுவாயினும் அது அனைத்து வகையிலும் ரசிகனுக்கு அந்த பேரனுபவத்தை தரும் சாத்தியங்களை முழுமையாக அடையவேண்டும். அந்த பேரனுபவத்தை தியேட்டரில் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை என்றார்.

image

தர்மா புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட்டுடன் நாகர்ஜுனா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் நடித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close