Published : 21,Aug 2020 10:20 PM

கொரோனாவுக்கு கசாயம்!!! நமக்கு கறிக்குழம்பு? - சித்த மருத்துவரை வாழ்த்திய நடிகர் சூரி

Actor-Soori-praises-Siddha-Doctor-Veerababu-for-treating-corona

சித்த வைத்தியத்தால் கொரோனாவை குணமாக்கி வரும் வைத்தியர் வீரபாபுவை வாழ்த்தி நடிகர் சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா என்றாலே எல்லோரும் ஓடி ஒளியும் இந்த காலகட்டத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவர் வீரபாபு மட்டும், மூலிகை கசாயம் கொடுத்து நோயாளிகளை குணமாக்கி வருகிறார்.

அவரை பாராட்டிய நடிகர் சூரி, ‘’கொரோனா ஆறு மாதமாக அனைவரையும் முடக்கிப்போட்டு இருக்கிறது. குடும்பம், நண்பர்கள் என யாராக இருந்தாலும், உலகமே சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

image

இந்த சூழலில், சென்னை சாலிகிராமம் ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் சித்த மருத்துவர் வீரபாபு, அவரது மூலிகை கசாயம் மூலமாய் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறாராம். ஆனால் ஒரு உயிரழப்பு கூட ஏற்படவில்லை.

எல்லாருமே அருகில் வர பயப்படும்போது நோயாளியைத் தொட்டு பரிசோதிக்கும் இவர் கடவுளாகவே தெரிகிறார். மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. இத்தனைபேரை காப்பாற்றிய, காப்பாற்றிக்கொண்டிருக்கிற உங்களையும், உங்கள் உடன் இருப்பவர்களையும், அந்த மதுரை மீனாட்சி எப்போதும் காப்பாற்ற வேண்டிக்கொள்கிறேன்’’ என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முக்கியமாக அவர் கொடுக்கும் கசாயம், கறிக்குழம்பு மாதிரி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்