[X] Close

‘தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் உண்டா?’ என்ன சொல்கிறார் முன்னாள் ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் ஷுக்லா

விளையாட்டு

Rajeev-Shukla-shuns-possibility-of-a-farewell-game-FOR-MS-DHONI

இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 


Advertisement

image

அவரது அறிவிப்பை தொடர்ந்து பலரும் தோனிக்கு பிரியா விடை கொடுத்து வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களும் அடங்குவர். 


Advertisement

அவருக்கு ஃபேர்வெல் மேட்சை ஏற்பாடு செய்யுமாறு பி.சி.சி.ஐ -யிடம் கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் தோனிக்கு  ஃபேர்வெல் மேட்ச் ஏற்பாடு செய்யப்படுமா? என்பதை தெரிவித்துள்ளார் முன்னாள் ஐ.பி.எல் தலைவரான ராஜீவ் ஷுக்லா.

image 


Advertisement

"கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ள தோனி தனக்கு ஃபேர்வெல் மேட்சை ஏற்பாடு செய்யுமாறு பி.சி.சி.ஐ -யிடம் சொலலாததால் அதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால் எனக்கு தெரிந்து அவருக்கு ஃபேர்வெல் மேட்ச் ஏற்பாடு செய்யப்படாது” என ANI செய்தி நிறுவனத்திடம் ராஜீவ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சேவாக், கம்பீர், யுவராஜ் வரிசையில் தோனிக்கும் ஃபேர்வெல் மேட்ச் நடத்தப்படாது என்றே தெரியவந்துள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close