Published : 07,Aug 2020 04:48 PM
’சிங்கக்குட்டியின் ஸ்னீக் லெவல் 100’ - வைரல் வீடியோ

புல்வெளியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை, சிங்கக்குட்டி தன்னுடன் விளையாட வரும்படி தொந்தரவு செய்து எழுப்பும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
வனவிலங்குகளின் வீடியோக்களை பதிவிடும் வெல்கம் டூ நேச்சர் என்ற ட்விட்டர் அக்கவுண்டில் வெளியான இந்த வீடியோ க்ளிப் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Lion cub sneak level 100 pic.twitter.com/KdbuYPNv1V
— Welcome To Nature (@welcomet0nature) August 7, 2020
அந்த வீடியோவில் பிற்பகல் நேரத்தில் ஒரு சிங்கம் புல்வெளியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அதன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அதன் குட்டி, சிறிது நேரம் கழித்து தனது தாயிடம் சென்று, அதனுடன் விளையாட ஏறி குதிக்கிறது. ஆனால் அந்த சிங்கம் எழுந்திராமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த க்யூட் வீடியோ 5,000 பார்வையாளர்களைத் தாண்டி நெட்டிசன்களை குஷிபடுத்திக் கொண்டிருக்கிறது.