[X] Close

சொன்ன மாதிரியே ரசிக்கிறாங்க: ஆதி ஆச்சரியம்!

aadhi-tell-about-maragatha-naanayam-movie

ஆதி, நிக்கி கல்ராணி, முனிஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மரகதநாணயம்’. இந்த படத்தை புதியவர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் பற்றி ஹீரோ ஆதி கூறும்போது, ‘மரகத நாணயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது. இதில் கதைதான் ஹீரோ. சில காட்சிகளை படமாக்கும் போது, இந்த காட்சி பெரிய அளவில் ரீச் ஆகும், பயங்கரமாகச் சிரிப்பார்கள் என்று உறுதியாகக் கூறினார் இயக்குனர். அப்போது, எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார் என்று யோசித்தேன். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. ரசிகர்களோடு தியேட்டரில் படத்தை பார்க்கும் போது அவர்கள் அனைவரும் அந்தக் காட்சிகளை கைதட்டி, சிரித்து ரசிக்கிறார்கள். அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் படம் இது. தெலுங்கில் ராம் சரணுடன் நடித்து வருகிறேன். அடுத்ததாக நானியுடன் நடித்து வருகிறேன். வில்லனோ, ஹீரோவோ எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எல்லோரும் கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்கள். வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close