Published : 21,Jun 2017 05:54 AM

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜரானார் சசிகலா

FERA-case---Sasikala-charged

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜராகியுள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் சசிகலா விசாரணை நடைபெற்று வருகிறது. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அப்லிங்க் வசதி செய்ததிலும், கருவிகளை வாங்கியதிலும் அந்நிய செலாவணி மோசடி நடந்ததாக சசி‌கலா மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ‌நடைபெற்று ‌வருகிறது. இந்த வழக்கில் கேள்விகளை முன்கூட்டியே அளிக்குமாறு கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் சசிகலாவுடன், அவர் உறவினர் சுதாகரனும் ஆஜராகி உள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்