Published : 12,Jun 2020 05:45 AM

24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா: இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!!

Coronavirus-in-India-live-updates--positive-cases-toll-up-to-2-97-535

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 2,86,579லிருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளது.

image

உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,102லிருந்து 8,498 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், குணமடைந்தோர் 1,41,029லிருந்து 1,47,195ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதன்படி,உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,41,331ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,811ஆக உயர்ந்துள்ளது.

image

பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும் மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா இந்த பட்டிலில் 4 வது இடத்தில் உள்ளது.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அவசியம்? - மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் சூசகம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்