[X] Close

"திடமாக இருந்து கொரோனாவை எதிர்ப்போம்" விராட் கோலி ட்வீட்

விளையாட்டு

Virat-Kohli-message-for-corona-virus-in-twitter

திடமாக இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்ப்போம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். "வருமுன் காப்பதே சிறந்தது" என குறிப்பிட்டுள்ள விராட் கோலி, அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தயவுசெய்து, அனைவரும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்" என விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

“வவ்வால், பூனையெல்லாமா சாப்பிடுறது.. ஒரு வரைமுறை இல்லையா” சீனா மீது அக்தர் கொந்தளிப்பு 

image

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டது. மேலும் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த 13 ஆவது ஐபிஎல் டி20 தொடரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியன் ஓபன் உள்ளிட்ட பேட்மிண்டன் போட்டித் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளைமறுதினம் முதல் ஏப்ரல் 12ம் தேதி வரையிலான தொடர்கள் கைவிடப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

சர்ச்சை விமர்சனங்கள்.. வர்ணனையாளர் குழுவிலிருந்து கழட்டிவிடப்பட்டாரா சஞ்சய் மஞ்ச்ரேக்கர்? 

இதனால், சுவிஸ் ஓபன், இந்தியன் ஓபன், சிங்கப்பூர் ஓபன் உள்ளிட்ட தொடர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close