Published : 08,Feb 2020 04:11 PM

மீண்டும் மைதானத்திற்குத் திரும்பும் சச்சின்: ரசிகர்கள் ஆர்வம்!

Sachin-Tendulkar-to-come-out-of-retirement-to-face-Ellyse-Perry-for-an-over

ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியின்போது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் விளையாடுகிறார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பலர் பாதிக்கப்பட்டனர். பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் தீயில் எரிந்த நிலையில், பல காட்டு விலங்குகளும் உயிரிழந்தன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதித் திரட்டுவதற்கான கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறுகிறது.

image

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஓர் அணியும், ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் மற்றொரு அணியும் தலா 10 ஓவர்கள் வரை விளையாடவுள்ளன. ரிக்கி பாண்டிங் அணிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்நிலையில், காட்சிப் போட்டியில் சச்சின் விளையாடினால், அதிகமாக நிதித் திரட்ட முடியும் என்றும், பவுண்டரி அடிப்பதை தடுத்து நிறுத்த பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் தயாராக இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவின் பெண்கள் அணியைச் சேர்ந்த எல்லிஸி பெர்ரி சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

image

இதை ஏற்றுக்கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கர், போட்டியின் இடைவேளையின்போது எல்லிஸி வீசும் ஒரு ஓவரை மட்டும் எதிர்கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பின் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவரில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட கோலி.. இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணங்கள்..!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்