[X] Close

அனல் மின்நிலையத்தில் தீ விபத்து

Fire-in-Vallur-Thermal-power-station

திருவள்ளூர் அருகே உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3-ஆவது அலகில் உள்ள ஜெனரேட்டரில் திடீரென இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து அமைத்துள்ள வல்லூர் அனல் மின் நிலையம் 3 அலகுகள் கொண்டது. வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி வீதம் மொத்தம் 1500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தீ விபத்து காரணமாக 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close