Published : 17,Dec 2019 04:11 PM
"கொரில்லா அரசியல் வேண்டாம்" : பிரதமர் மோடி எச்சரிக்கை

மறைந்திருந்து தாக்கும் கொரில்லா அரசியல் வேண்டாம் என மீது எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சாடியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள், ஜனநாயக முறையில் அரசுடன் விவாதிக்க முன்வர வேண்டும் என்றார். இளைஞர்கள் இடையே நகர்புற நக்சல்கள், வன்முறையை தூண்டுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமியர் மத்தியில் காங்கிரஸ் கட்சி அச்சத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மறைந்திருந்து தாக்கும் கொரில்லா அரசியல் வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். தைரியம் இருந்தால் பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க காங்கிரஸ் தயாரா எனவும் பிரதமர் சவால் விடுத்தார்.
இதனிடையே எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். சிறுபான்மையினரின் குடியுரிமை பறிபோகும் வகையில் சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்றும் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.