[X] Close

தங்கையை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது!

Man-arrested-for-raping-13-year-old-girl

13 வயது சிறுமியை 8 மாத கர்ப்பிணியாக்கிய இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். 
 
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் குவைத்தில் கப்பலில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜசேகரன் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்தநிலையில் ராஜசேகரனுக்கு கடந்தாண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். வேலைக்கு செல்லாத நிலையில், ராஜசேகரன் அருகேயுள்ள வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கே தங்கை முறை கொண்ட 13 வயது சிறுமியுடன் தினமும் விளையாடி வந்துள்ளார். தங்கையுடன் தானே விளையாடுகிறார் என்று இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி மயக்கமடைந்து விழுந்துள்ளார். பாய்ந்துபோன சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கர்ப்பிணியாவதற்கான காரணங்களை விசாரித்தபோது, ராஜசேகரன் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுதனர். போலீசார் ராஜசேகரனை கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 
ராஜசேகரன் மனைவியும் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close