[X] Close

ரஜினி காந்துடன் முதல் முறையாக இணையும் பரோட்டா சூரி

It-s-official--Soori-joins-Rajinikanth-s--Thalaivar-168-

ரஜினிகாந்துடன் இணைந்து பரோட்டா சூரி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Advertisement

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆகவே இது குறித்த செய்திகள் அனைத்தும் ‘தலைவர் 168’ என்றே பகிரப்பட்டு வருகிறன. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் செய்தி வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

சூரி, ஏற்கெனவே சிவாவின் இயக்கத்தில் வெளியான ‘வேதாளம்’ படத்தில் நடித்திருந்தார். அதனை அடுத்து அவர் இயக்கத்தில் இப்போது ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க அவருக்கு இயக்குநர் வாய்ப்பளித்துள்ளார். பரோட்டா சூரி, முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ஜோதிகா மற்றும் மஞ்சு வாரியார் ஏற்கெனவே இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வரும் ஆண்டு 2020 தீபாவளி பண்டிகையன்று இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்க உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close