முதியவர்களை பாதுகாக்க முடியாமல் திருவண்ணாமலைக்கு வந்து விட்டுச் செல்லும் பிள்ளைகளால் அங்கு ஆதரவற்ற முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் முக்கிய புண்ணிய ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் பல முதியவர்களை கொண்டு வந்து ஆதரவு இல்லாமல் விட்டு விட்டு செல்வது வழக்கமாகி உள்ளது. வயதான காலத்தில் பெற்றோர்கள் பாரமாக மாறி விட்டதாக நினைத்து, தங்களால் அந்த பெற்றோர்களை வைத்து பராமரிக்க முடியாததால் அவர்களை சிலர் திருவண்ணாமலையில் வந்து விட்டு விட்டு செல்கின்றனர். மேலும் பொருளாதார வசதியின்மை, நோய்க்கு மருத்துவம் பார்க்க வசதியின்மை போன்ற பல காரணங்களை கூறி பெற்றோரை பிள்ளைகள் இங்கு வந்து விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
இவ்வாறு விட்டு செல்லப்படும் இந்த முதியவர்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பதும், பிச்சைகூட எடுக்க முடியாமல் உடல்நிலை சரியில்லாமல் அப்படியே உயிர் இழப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இவ்வாறு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வருடமாக கணக்கெடுத்தால் 25-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வந்துள்ளனர். இவர்களில் ஏழு பேர் உடல் நலமின்றி இறந்துள்ளனர். அவர்களை ஆதரவற்ற பிணங்களாக அடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கும் முதியவர்களை சிலரை கண்டறிந்து சமூக சேவகர் மணிமாறன் என்பவர் அரசு காப்பக்கத்தில் சேர்த்து வருகிறார். இதுகுறித்து அவர், “திருவண்ணாமலையில் இதுபோல முதியவர்களை கொண்டு வந்து விட்டு விட்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது புண்ணிய ஸ்தலம் அங்கு போய் இறந்தால் நல்லது என்று கொண்டு வந்து விட்டு விட்டு செல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி பெற்றோர்களை விட்டுச் செல்வது புண்ணியம் அல்ல பிள்ளைகளுக்கு பாவம் தான் வந்து சேரும். முதியவர்களை கடைசி காலம் வரை வைத்திருந்து அவர்களை இறந்த பிறகு நல்லடக்கம் செய்வது தான் ஒரு பிள்ளையின் கடமை. அதை செய்யத் தவறும் பிள்ளைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்த பிள்ளைகளிடமிருக்கும் சொத்துகளை பறிமுதல் செய்து அந்த முதியவர்களிடம் கொடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கிறார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!