Published : 27,Oct 2019 03:29 AM
கார்த்தியின் ’கைதி’ ரீமேக் உரிமைக்குப் போட்டி!

கார்த்தி நடித்துள்ள ’கைதி’ படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’கைதி’. ’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தைப் பார்த்த இரண்டு, முன்னணி இந்தி ஹீரோக்கள் இதன் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனத்துடன் இணைந்து இதை இந்தியில் தயாரிக்கவும் சிலர் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல, கர்நாடகாவிலும் இந்தப் படத்தின் ரீமேக்கை உரிமையை வாங்க போட்டி ஏற்பட்டுள்ளது.