[X] Close

டிஜிட்டல் விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் 60% அதிகரிப்பு

Govt-gets-tax-bonanza-from-online-ads-on-Google--Facebook

சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் இந்திய நிறுவனங்கள் செய்த விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் சுமார் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஃபேஸ் புக், கூகுள் உள்ளிட்டவைகளில் கடந்த நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் சுமார் 15 ஆயிரத்து 650 கோடி ரூபாய் அளவிற்கு விளம்பரங்கள் செய்துள்ளன. இதுவே முந்தைய ஆண்டில் 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கே நிறுவனங்கள் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு செலவிட்டிருக்கின்றன. 

இந்நிலையில், கடந்த நிதியாண்டில் டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம் சுமார் 939 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முந்தைய ஆண்டில் 590 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close