Published : 06,Aug 2019 07:03 AM

விவாதத்திற்கு முன்பே மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது ஏன்? - மக்களவையில் டி.ஆர். பாலு

t-r-balu-speech-in-lok-sabha-about-jammu-kashmir

நாடாளுமன்றத்தில் விவாதித்த பின்னரே மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என திமுக எம்.பி, டி.ஆர். பாலு மக்களவையில் தெரிவித்தார். 

370 பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது திமுக எம்.பி டி.ஆர். பாலு ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது ஏன் எனவும் நாடாளுமன்றத்தில் விவாதித்த பின்னரே குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பியிருக்க வேண்டும் எனவும் டி.ஆர். பாலு தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் சூழல்கள் மாறுபட்டது என ஏற்கனவே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் பாஜக எம்.பிக்கள் தற்போது எங்களுக்கு இனிய எதிரிகள் எனவும் தெரிவித்தார்.  மாநிலத்தை பிரித்து நகராட்சி போன்று ஆக்குவது ஏன் என பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்னதை, அவசரமாக நிறைவேற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்