தாக்கபட்ட மருத்துவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நில்ரதன் சர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர், பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவரின் இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ஐந்து நாட்களுக்கும் மேலாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மம்தா பானர்ஜி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. முதலில் மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தாக்கபட்ட மருத்துவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், “மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வரவேண்டும். ஆயிரமாயிரம் மக்கள் சிகிச்சைக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கிறேன். மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு நாட்களாக காத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வரவில்லை. நீங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நாங்கள் எந்த ஒரு தனி மனிதனையும் கைது செய்ய மாட்டோம். மருத்துவர்களுக்கு எதிராக எவ்வித போலீஸ் நடவடிக்கையும் இருக்காது. நான் எந்த கடுமையான நடவடிக்கை எடுக்க போவதில்லை. நல்ல புத்தி மேலோங்கட்டும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு