Published : 03,Jun 2019 06:49 AM

ஹைதராபாத்தைவிட்டு வெளியேறிய ஆந்திர அரசு அலுவலகங்கள் 

AP-Govt-orders-reallocation-of-AP-govt-buildings-to-Telangana

ஆந்திராவில் புதிய அரசு பொறுப்பேற்ற ஒருசில நாட்களிலேயே தெலங்கானாவில் இயங்கி வந்த ஆந்திர அரசு அலுவலகங்கள் முழுவதையும் காலி‌ செய்து தெலங்கானா அரசிடம் ஆந்திர அரசு ஒப்படைத்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம் 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தெலங்கானா தனி மாநிலமாக உதயமானது. மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பாக ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகரமாக இருந்தது. உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும் ஹைதராபாத்தில்தான் இருந்தன. பின்னர், மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக ஆந்திர மாநிலத்தில் புதியதாக உருவாக்கப்பட்டது. அமராவதி ஆந்திராவுக்கான தலைநகரமானது. 

Image result for telangana assembly

இந்நிலையில் ஹைதராபாத்தில் இயங்கி வந்த அனைத்து அரசு அலுவலகங்களையும் ஆந்திர அரசு காலி‌ செய்து தெலங்கானா அரசிடம் ஒப்படைத்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலங்களுக்கு 16 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் தலைநகராக இருக்கும் என பிரிவினை சாசனத்தில் வரையறை செய்யப்பட்டது. 

Related image

இதனால் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமராவதியை புதிய தலைநகரமாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தது.  தலைமைச் செயலகம், அரசுத்துறை அலுவலகங்கள், மாநகராட்சி போன்ற அனைத்தையும் இடமாற்றம் செய்வதில் சிக்கல்கள் நீடித்தன. ‌இந்தச் சூழலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற ஒருசில நாட்களிலேயே, தெலங்கானாவில் இயங்கி வந்த ஆந்திர அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு அமராவதி, குண்டூர், விஜயவாடா போன்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்