அருணாச்சல பிரதேசத்தை முந்தைய அரசு புறக்கணித்து வந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரதமர் மோடி இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இரண்டு நாட்கள் பயணமாக வடகிழக்கு பகுதிகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு நாட்களில் அசாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார். மேலும் சில திட்டங்களையும் இப்பகுதியில் பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.
இன்று அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி சில திட்டங்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் பேசிய பிரதமர் மோடி, அருணாச்சல் சூரிய உதயத்தின் நிலம். இவ்விடம் நமக்கு உறுதியை கொடுக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் அருணாச்சல பிரதேசத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் போக்குவரத்து, மருத்துவத்தை மேம்படுத்த ஏதுவாக மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி செலவில் பல நலத்திட்டங்களை வழங்க உள்ளது. அருணாச்சல பிரதேசம் தண்ணீர் தேசமாக இருக்கிறது. இது இம்மாநிலத்தின் கொடை. இந்தத் தண்ணீர் சக்தியை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம். ஆனால் முந்தைய அரசு அப்படி ஏதும் செய்யவில்லை. அவர்கள் இம்மாநிலத்தை புறக்கணித்தார்கள். நாட்டின் வடகிழக்கு முன்னேறினால்தான் நாடு முன்னேறும். வடகிழக்கை முன்னேற்றவே நாங்கள் பாடுபடுகிறோம்.
அருணாச்சல பிரதேசத்துக்கு பாஜக அரசு இரண்டு விமான நிலையங்களை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாவும் அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் எல்லா பகுதிகளுடன் இணைத்திருக்கிறோம். இம்மாநிலம் நாட்டின் பாதுகாப்பு நுழைவு வாயிலாக உள்ளது. இதனை மேம்படுத்தவே நாங்கள் நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார். திருப்பூருக்கு வரும் பிரதமர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, சில நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!