[X] Close

நாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது - சீதாராம் யெச்சூரி

12-foot-tall-statue-of-Lenin-unveiled-in-TN-s-Tirunelveli

வரும் நாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


Advertisement

நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் ரஷ்ய புரட்சியாளர் லெனினின் 12 அடி உயர சிலை திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சிலையை திறந்து வைத்தார். சிலை திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Advertisement

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, பாஜக அரசை அகற்ற நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதாக தெரிவித்தார்.‌ பொ‌துவுடமை அமைப்புகள் ஆட்சிக்கு வர தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது எனவும் மிகப்பெரிய படையை கொண்ட கௌரவர்கள் போன்றவர்கள் பாஜகவினர் எனவும் குறிப்பிட்ட சீதாராம் யெச்சூரி, பாண்டவர்கள் போன்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக அரசை அகற்றுவோம் எனத் தெரிவித்தார்.


Advertisement

மேலும் மதச்சார்பற்ற ஆட்சியை இந்தியாவில் உருவாக்குவதே மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் குறிக்கோள் எனவும் தமிழகத்தில் அதிமுக, பாஜக, மேற்வங்கத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரசை அகற்றுவதே நோக்கம் எனவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close