எட்டு மாத குழந்தையின் எடை 17 கிலோவாக அதிகரிப்பதால் அதன் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
பஞ்சாபை சேர்ந்தவர் ரீனா குமார். இவர் கணவர் சூரஜ் குமார். இவர்களுக்கு கடந்த எட்டு மாதத்துக்கு முன் அழகானப் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சாஹத் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆரம்பத்தில் மற்றக் குழந்தைகளைப் போலவே இருந்த சாஹத், நாளாக ஆக, சகட்டு மேனிக்கு சாப்பிட ஆரம்பித்தது. ’குழந்தை நல்லா சாப்பிடட்டும்’ என்று பெற்றோரும் கேட்டதை கொடுத்து வந்தனர். திடீரென்று பார்த்தால், சாஹத்தின் உடல் எடை கன்னா பின்னாவென்று எகிறிவிட்டது. அதாவது எட்டே மாதத்தில் பாப்பாவின் எடை, 17 கிலோவாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக, மூச்சு விடுவதற்கும் தூங்குவதற்கும் குழந்தைக்கு சிரமம் ஏற்பட்டது.
இதுபற்றி குழந்தையின் அப்பா சூரஜ் குமார் கூறும்போது, ’டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். ரத்த பரிசோதனை செய்துவிட்டு அடுத்தக்கட்டம் பற்றி யோசிக்கலாம் என்றனர். ஆனால், குழந்தையின் தோல், வழக்கமாக இருப்பதை விட கடினமாகிவிட்டது’ என்றார்.
இதையடுத்து இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் வாசுதேவ் சர்மாவிடம் கேட்டபோது, ‘குழந்தையின் உடல் எடை இப்போது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. பத்து வயது குழந்தை சாப்பிடும் உணவை இந்தக் குழந்தை சாப்பிடுவது ஆச்சரியம்தான். அதற்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.’ என்றார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!