ஜம்மூ-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்தியக் காவலர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக இந்திய பாதுகாப்புக் காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த காவலர்கள், அந்த இடத்தை சோதனை செய்தனர். இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இதில் குண்டடிபட்ட 3 பாதுகாப்பு காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த வீரரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அத்துடன் பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புத்துறையினர் நடத்திய தாக்குதலில் அந்த இடத்திலிருந்து பயங்கரவாதிகள் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்கள் பயன்படுத்துவதற்கு வைத்திருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கூறியுள்ள பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றிவளைத்துள்ளதாகவும், விரையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் காஷ்மீரில் 8 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது மேலும் 3 பேர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்