[X] Close

மீண்டும் 30 மூட்டைகளில் செல்லாத நோட்டுகள் 

Again-30-bundle-of-old-banknotes-in-near-the-Chennai

சென்னை மாதவரம் ரவுன்டானா பகுதியில் நேற்று பணமதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் 35 மூட்டைகள் பிடிபட்ட நிலையில், மேலும் 30 மூட்டைகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.


Advertisement

சென்னை மாதவரம் அடுத்த ரெட்டேரி பகுதியில் ஆட்டுதொட்டி என்ற இடம் உள்ளது. அங்கு குப்பையில் பழைய ரூபாய் நோட்டுகள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மூட்டைகளாக கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


Advertisement

இதையடுத்து தகவலறிந்து வந்த மாதவரம் காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டனர். பின் சோதனையின் போது அந்தப் பகுதியில் 35 மூட்டைகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுத்தனர்.


Advertisement

இந்நிலையில் மேலும் 30 பண மூட்டைகள் அதே பகுதியில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. பணம் குறித்த புகார்கள் ஏதும் வராத நிலையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை துண்டுத் துண்டாக வெட்டி வீசியவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரு தினங்களில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 65 பண மூட்டைகள் ஓரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பண மதிப்பு நீக்கத்திற்குப் பின் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாததால் யார் இதனை செய்தது எனத் தெரியாமல் காவல்துறை திகைத்து வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close