தோனியுடன் எந்த பிரச்னையும் இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் புனே அணிக்கு தோனிக்கு பதிலாக எதிர்வரும் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான சமீபத்திய டெஸ்ட் தொடரில் ஸ்மித்தின் செயல்பாடுகளை இந்திய அணியின் கேப்டன் கோலி விமர்சித்திருந்தார். இந்தநிலையில், தோனி குறித்து ஸ்மித்திடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்மித், தோனி சிறந்த மனிதர். அவருக்கும், எனக்கும் இடையில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை. அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் 10ஆவது சீசன் தொடங்குவதை முன்னிட்டு புனே அணியின் சீருடை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. அதில், ஸ்மித்துடன், அஜிங்கியா ரஹானே மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்