[X] Close

"ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது" - உயர்நீதிமன்றத்தில் மனு

Case-file-against-sterlite-in-madurai-high-court

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய, மாநில சுற்றுச்சூழல்த்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். வேதாந்தா நிறுவனம் 172 ஹெக்டேர் நிலம் உள்ளதாக தவறானத் தகவல்களைக் கூறி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆபத்தான கழிவுகளை உரிய முறையில் வெளியேற்றாததால் நீர்நிலைகள், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். எனவே மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தவறானத் தகவல் கொடுத்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற வேதாந்தா நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரின்ஸ் கார்டோசா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

         

இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம் , எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மத்திய, மாநில சுற்றுச்சூழல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close