[X] Close

சபரிமலையில் யானைக்கு மதம் பிடித்தது - 9 பேருக்கு காயம்

Sabarimala-Temple-Elephant-gone-wild-and-injures-9-pilgrims

கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சிக்காக பம்பையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக சந்நிதானம்
புறப்பட்டு சென்றனர். சரண கோஷங்கள் முழங்க நடந்த ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் விக்ரகத்தை சுமந்தவாறு சபரிமலை
மேல்சாந்தியின் உதவியாளர் திருச்சூரை சேர்ந்த தினேஷ் (29) என்பவர் யானை மீதேறி பயணித்தார்.  ஊர்வலம் அப்பாச்சிமேடு பகுதியை வந்தடைந்தபோது, திடீரென யானைக்கு மதம் பிடித்தது, மேல்சாந்தியின் உதவியாளரை சுமந்தவாறு யானை வேகமாக ஓட ஆரம்பித்தது. ஐயப்ப பக்தர்கள் அலறியத்தவாறு அங்குமிங்கும் சிதறி ஓடினர்.  


Advertisement

யானையை விரட்டி கட்டுக்குள் கொண்டுவர யானையின் வாலை பிடித்த யானைப்பாகன் கிருஷ்ணகுமாருக்கு தவறி விழுந்ததில் கால் முறிந்தது. யானை மீதிருந்த மேல்சாந்தியின் உதவியாளர் யானை மீதிருந்து கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மேல்சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலத்தில் வந்த ஒன்பது ஐயப்ப பக்தர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். யானைக்கு முன்பாக விட்டு நான்கைந்து மீட்டர் தூரத்தில் பக்தர்கள் சென்றதாலும் யானைக்கு மதம்பிடித்ததைக்கண்ட  பக்தர்களின் அலறல் சப்தத்தாலும் யானை ஓடும் வழியில் பக்தர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. காட்டிற்குள் ஓடிய யானையை பாகன்கள் காட்டிற்குள்ளேயே கட்டிவைத்து அதை சமாதானமடையச் செய்யும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். ஆனாலும், சந்நிதானத்தில் வழக்கமாக ஐயப்பனுக்கான ஆறாட்டு நிகழ்ச்சி முறைப்படி நடந்து முடிந்தது.
 


Advertisement

Advertisement
[X] Close