முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் - தவான் ஜோடி நிதானமாக விளையாடினர். அவர்களது ஆட்டத்தை பார்க்கும்போது இந்திய அணி 130 -140 ரன்கள் தான் குவிக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ரோகித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல ஆடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தவான் 35 ரன்கள் எடுத்துதிருந்த போது ஆட்டமிழந்தார். தவான் விக்கெட்டையும் பறிகொடுக்கும் போது இந்திய அணி 9.5 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய ரெய்னா அதிரடியாக விளையாடினார். இந்நிலையில் ரோகித் தனது அரைசத்தை பதிவு செய்தார். இதற்காக அவர் 42 பந்து எடுத்துக்கொண்டார். இதனையடுத்து அதிரடியாக விளையாடிய ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து விளாசினார். அதிரடியாக விளையாடிய ரெய்னா 47ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20ஓவர் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித்ஷர்மா 89 ரன்களும், ரெய்னா 47ரன்களும் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அந்த அணியில் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் தனி ஆளாக போராடினார். 20ஓவர் முடிவில் அந்த அணியால் 6விக்கெட் இழப்புக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 72 ரன்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வாசிங்டன் சுந்தர் 3விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷர்துல் தாக்கூர், சாஹல், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?