[X] Close

டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

South-Africa-must-dig-deep-to-level-the-T20I-series-against-rampant-India

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20  கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது.


Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றிருந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. இந்தப்போட்டியில் அபாரமாக பந்துவீச இந்திய வீரர் புவனேஷ்குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் டி20 போட்டியில் 5விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20  கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குத் தொடங்குகிறது. பிற்பகலில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால், போட்டி தொடங்குவதில் தாதமம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி தென்னாப்பிரிக்க அணிக்கு உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close