[X] Close

பணப்பட்டுவாடா‌ கலாச்சாரத்தை தொடக்கியது திமுக தான்: சுப்பிரமணியன் சுவாமி

DMK-s-initiated-money-laundering--Subramanian-Swamy

தமிழகத்தில் பணப்பட்டுவாடா‌ கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது திமுகதான் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வியாக்கிழமை ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும்
ஆதரவாளர்கள் பரப்பரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா நடைப்பெறுவதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஆர்.கே நகரில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில்
பணப்பட்டுவாடா‌ கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது திமுக ஆட்சித் தான் என்று குற்றம்சாட்டினார். மேலும், 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள
அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி எனவும் அவர் தெரிவித்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close