Published : 19,Feb 2017 11:12 AM

உ.பி.யில் குண்டர்கள் ஆட்சி நடக்கிறது... மோடி குற்றச்சாட்டு

Modi-Accusation-on-Samajwadi-Party

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி குண்டர்கள் துணையுடன் ஆட்சி நடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பதேபூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே உத்தரவிடும் அளவில் உத்தரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக் கூறினார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்சிய அமைச்சர் பிரஜாபதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய பிரதமர், அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் காவல் நிலையங்கள் சமாஜ்வாதி கட்சி அலுவலகங்களாக மாறி விட்டதாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் அகிலேஷ் முகத்தில் தேர்தல் தோல்வி இப்போதே தெரிவதாகக் கூறிய மோடி, சட்டம் ஒழுங்கு சீரழிவால் உத்தரப் பிரதேச மக்கள், ஆளும் கட்சி மீது ஆத்திரத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்