Published : 13,Nov 2017 07:24 AM
நாளை முதல் மழை படிப்படியாக குறையும்

தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், நெல்லை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பதிவு அதிக அளவில் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் எண்ணூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவு அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.