Published : 15,Feb 2017 04:16 AM

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம்

TTV-Dinakaran-appointed-as-ADMK-s-vice-GC

அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், எஸ். வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் இன்று அறிவிப்பு வெளியானது. இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார். தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டது. தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால், அவர்க‌ள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை செல்ல உள்ள நிலையில், சசிகலா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கடந்த 2011-ல் அப்போதைய முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்