Published : 29,Oct 2017 08:12 AM

தமி்ழகத்தில் டெங்குவுக்கு 52பேர் உயிரிழப்பு: சுகாதாரத் துறை செயலர்

Government-Record-wise-Dengue-death-52-in-TN

 

தமிழக அரசின் கணக்கின்படி டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

டெங்கு பாதிப்புகள் குறித்து நாகை மாவட்டத்தில் தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளின் ஆய்வை முடித்தவர் இன்று நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் டெங்கு மற்றும் பிறகாய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உயிரிழப்பவர்கள் அனைவரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்கள் கிடையாது என்றும் தமிழக அரசின் கணக்கின்படி டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற காய்ச்சல் காரணமாக 80 பேர் இறந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். மழை பிரதேசங்களில் பணிப்புரிய மருத்துவர்கள் முன் வர வேண்டும் என்றும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அரசு சார்பாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்