காய்ச்சல்களை தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆயினும், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 16 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் மண்கட்டி தெப்பகுளம் பகுதியை சேர்ந்த திருவாளி என்ற கூலித்தொழிலாளி வைரஸ் காய்ச்சலால் கடந்த சில நாட்களாக சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதேபோல, மதுரை பாஸ்டின் நகரைச்சேர்ந்த பத்து வயது சிறுவன் கிருஷ்ணராஜ் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
மதுரை பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவரின் மனைவி தேவி, காய்ச்சலுடன் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சாமிநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர், தீபாவளி விடுமுறையில் வீட்டுக்கு வந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடுமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி தினேஷ் குமார் உயிரிழந்தார்.
திருச்சி-புத்தூர் பகுதியிலுள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தின் பங்குதந்தை செல்வகுமாரின் 14 வயது மகள் கெத்தியா நேற்று காலை காய்ச்சலால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த பரிசோதனையில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கெத்தியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பறையப்பட்டி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரின் 11 வயது மகள் தமிழ் யாழினி, அரூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் அதிகரித்த நிலையில் சேலத்தின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார். இதேபோல் தருமபுரி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த ராமன் மனைவி கிருஷ்ணம்மாள் காய்ச்சலுக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் இன்று உயிரிழந்தார்.
தஞ்சை திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், விருதுநகரைச் சேர்ந்த லலிதா ஆகியோரும் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தனர். சேலம் புதூரைச் சேர்ந்த இன்பரட்சகன், திண்டுக்கல்லில் 5 வயது குழந்தை பிரிசில்லா மேரி, பொள்ளாச்சி அருகே கணபதி பாளையத்தைச் சேர்ந்த சபரிநாதன் ஆகியோரும் காய்ச்சலால் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த மணிமேகலை பன்றிக்காய்ச்சலால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்