[X] Close

தேனியில் எம்ஜிஆர்‌ நூற்றாண்டு விழாவுக்கான பூமி பூஜை: ஓபிஎஸ் பங்கேற்பு

Bhoomi-Pooja-for-the-MGR-Century-Festival-in-Theni

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரை, சேலம், கரூர், புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் நடத்தப்பட்ட நிலையில் 
தேனி அருகேயுள்ள போடி விலக்குப் பகுதியில் அடுத்த மாதம் 5-ஆம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

போடி விலக்குப் பகுதியில் நடந்த இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று, கால்கோல் நாட்டினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close