[X] Close

தீவிர வாகன தணிக்கை: 40 நாளில் ரூ.1 கோடி வசூல்

police-got-1-crore-from-traffic-violations-fines

சென்னையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபோர் 10 ஆம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 97 லட்சத்து 45 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக மொத்தம் 97 ஆயிரத்து 456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாகன தணிக்கை மூலம், ஹெல்மெட் அணியாதவர்கள், மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் என பல வகையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை அருகே விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 2 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close