[X] Close

பெயரை மாற்றினார் சமந்தா

samantha-name-is-changed-on-twitter-count

திருமணத்திற்குப் பிறகு ட்விட்டர் கணக்கில் தனது பெயரை மாற்றினார் நடிகை சமந்தா.


Advertisement

தெலுங்கு நடிகர் நாகாஜூனா மகன் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது. கோவாவில் திருமணம் முடிந்த சில நாட்களில் அவர் திரை வாழ்க்கைக்கு திரும்பினார். அவரும் அவரது மாமனார் நாகஜூனாவும் நடித்த படம் ஒன்று வெளியாக உள்ளது. ராஜூ காரி காதி 2 என்ற இந்தப் படத்தில் சமந்தா வழக்கறிஞராக நடித்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இதுவரை அவர் தனது ட்விட்டர் கணக்கில் சமந்தா ரூத்  பிரபு என்ற பெயரில் இயங்கி வந்தார். திடீரென்று அவர் தனது பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றி உள்ளார். அக்கினேனி என்பது நாகாஜூனாவின் குடும்ப பெயர். திருமணத்தை இந்து முறைப்படியும், வரவேற்பு நிகழ்ச்சியை கிறிஸ்துவ முறைப்படியும் முடித்த அவர் பெயரை இந்து முறைப்படி மாற்றியிருப்பதினால் அவர் ஒருவேளை மதம் மாறியிருக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close