[X] Close

காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு மறைப்பு

Kamarajar-Name-Erased-in-Namakkal


நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மேம்பாலத்தில் பதிக்கப்பட்டுள்ள காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு மறைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளை‌த்தில் 30 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே அமைந்துள்ள மற்றொரு மேம்பாலத்தில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மேம்பாலத்துக்கு வர்ணம்பூசும்போது அந்த கல்வெட்டு கருப்பு மை பூசி மறைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close