Published : 29,Dec 2022 09:49 PM

ஐசிசி 2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருது! சூர்யகுமாருக்கு டஃப் கொடுக்கும் 3 வீரர்கள்

ICC-T20-Player-of-the-Year-2022-Award--Suryakumar-will-compete-with-3-players-

ஐசிசி 2022ஆம் வருடத்தின் சிறந்த் டி20 வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் பெயரையும் சேர்த்து வெளியிட்டுள்ளது ஐசிசி.

சூர்யகுமார் யாதவ் 2022ஆம் ஆண்டு ஒரு சிறப்பான டி20 வடிவ போட்டிகளை கொண்டிருந்தார். நடப்பு 2022ஆம் வருடத்தில், 32 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் சூர்யா 32 இன்னிங்சில் 1214 ரன்கள் குவித்துள்ளார். டி20யில் சூர்யகுமார் யாதவின் அதிகபட்ச ஸ்கோர் 117ஆகும். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ் கிவிஸ் அணிக்கு எதிராக அற்புதமான இரண்டாவது சதத்தை பதிவு செய்திருந்தார்.

1000 ரன்களை கடந்த 2ஆவது வீரர்!

image

நடப்பு 2022ல் 32 போட்டிகளில் விளையாடி இருக்கும் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்டர் முகமது ரிஸ்வானிற்கு பிறகு இரண்டாவது வீரராக 1000 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். அவர் விளையாடி இருக்கும் 32 போட்டிகளில் 2 டி20 சதங்கள், 10 டி20 அரை சதங்கள் மற்றும் 5 முறை 30+ மற்றும் 2 முறை 20+ என ரன்களை வாரி குவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த ஒரே வீரர்!

image

சூர்யகுமார் யாதவ் 654 டி20 பந்துகளில் எதிர்கொண்டு 46.69 சராசரியுடன் 185.6 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். மற்றும் டி20யில் சூர்யகுமார் யாதவ் 112 பவுண்டரிகள் உடன் சேர்த்து 69 சிக்சர்களை சிக்சர்களை விளாசி உள்ளார். ஒரு வருடத்தில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்கள் என்ற சாதனையை படைத்துள்ளார் சூர்யா.

வருடத்தின் முடிவில் நம்பர் 1 பேட்டராக முடிக்கும் 8ஆவது இந்திய வீரர்!

இந்த வருடம் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தோடு நிறைவு செய்கிறார் இந்தியாவின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். முதல் இடத்திற்கான போட்டி பாகிஸ்தான் அணியின் ஓபனர் முகமது ரிஸ்வான் மற்றும் சூர்யகுமார் இடையே பலமாகவே இருந்து வந்தது. முதலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யா, பின்னர் முதலிடத்தில் இருந்த முகமது ரிஸ்வானையும் பின்னுக்கு தள்ளி தன்னுடைய சிறப்பான பேட்டிங் பார்மால் முதல் இடத்தோடு இந்த வருடத்தை முடித்திருக்கிறார்.

image

இந்நிலையில் வருடத்தின் இறுதியில் நம்பர் 1 வீரராக முடிக்கும் 8ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை சேர்த்துள்ளார் சூர்யகுமார் யாதவ். விராட் கோலி (8 முறை), சச்சின் டெண்டுல்கர் (5 முறை), சுனில் கவாஸ்கர் (2 முறை), எம்எஸ் தோனி (2 முறை), திலீப் வெங்சர்க்கார், கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட் தலா ஒருமுறை என இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். அவர்களுக்கு பிறகு 8ஆவது இந்திய வீரராக வருடத்தை நம்பர் 1 வீரராக முடித்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

2022ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருது!

ஐசிசி-யின் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதுக்குனா போட்டி வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பெயரையும் சேர்த்துள்ளது ஐசிசி.

image

2022ல் சிறப்பான ஆட்டத்தை கொண்டிருந்த சூர்யகுமார், இந்த விருதுக்கான போட்டியில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சாம் கரன், பாகிஸ்தான் அணியின் ஓபனிங் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சிக்கந்தர் ராசா என 3 வீரர்களுடன் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் போட்டியிடுகிறார்.