Published : 21,Sep 2022 01:09 PM

குண்டும் குழியும் நிறைந்த சாலையில் பிரைடல் போட்டோகிரபி! - வைரலாகும் வீடியோ

Kerala-Bride-Walks-On-Road-Full-Of-Potholes-For-Photoshoot-gone-viral

குண்டும் குழியும் நிறைந்த சாலையில் பிரைடல் போட்டோகிரபி செய்துள்ளனர் கேரளாவை சேர்ந்த ஜோடி. 

பிரைடல் போட்டோகிராபி என்பது கடந்த சில வருடங்களாகவே பிரபலமாகி வருகிறது. ஒவ்வொருவரும் தனித்துவமான தீம்களில் திருமணத்துக்கு முன்னும் பின்னும் பிரைடல் போட்டோஷூட் செய்து வருகின்றனர். வசதியான குடும்ப பின்னணியை கொண்டவர்கள் எளியவர்களின் வாழ்கையில் இருக்கும் காதலைப் பிரதிபலிப்பது போன்ற போட்டோஷூட் நடத்துவது, திருமணங்களுக்குப் பிறகு வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து ஜாலியான போட்டோஷூட் செய்வது, இயற்கை கொஞ்சும் இடங்களில் காதல் வெளிப்படுத்தும் போட்டோஷூட் செய்வது என்று பலவகையான போட்டோஷூட் அன்றாடம் நடந்துவருகிறது.

image

அந்தவகையில், பிரைடல் போட்டோகிராபியில் தனது சமூக அக்கறையை தீம்மாக மாற்றியிருக்கிறார் மணப்பெண் ஒருவர். கேரளாவைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள சாலைகளில் இருக்கும் பள்ளங்களின் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தனது திருமண போட்டோஷூட்டை மறக்கமுடியாததாக மாற்றியுள்ளார்.

சிவப்பு நிற சேலையில், நகைகள் அணிந்து திருமணக் கோலத்தில் பள்ளங்களும், சேற்று நீரும் நிரம்பியுள்ள ரோட்டில் சாலையில் அழகாக நடந்து செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. தனது புகைப்படத்தின்மூலம் தன்னை சுற்றியுள்ள பிரச்னையை அடையாளப்படுத்தும்விதமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ரீலாகி வருகின்றது. பலரும் இந்த வீடியோவுக்கு ரீல்ஸ் வழியாக பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்