Published : 19,Sep 2017 06:20 AM

தனி நபர் இலவச கழிப்பிடத் திட்டத்திற்கு லஞ்சம் - மக்கள் அவதி

Individual-Person-Free-Plan---People

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச தனிநபர் கழிப்பிடத்திட்டத்தின் கீழ் பணம் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பயனாளிகள் புகார் அளித்துள்ளனர்.

தூய்மைக்காகவும், சுகாதாரத்திற்காகவும் ஏராளமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆனால், திட்டங்களின் பலன் மக்களை சென்று சேர்கிறதா என்ற கேள்வி நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தனி நபர் கழிப்பிடம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 12 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச கழிப்பிடம் கட்டுவதற்கு ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 3 ஆயிரம் வரை லஞ்சம் பெறப்படுவதாக பய‌னாளர்கள் புகார் கூறுகிறார்கள்.

இது குறித்து மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் குமாரிடம் கேட்டதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு 12 ஆயிரம் இரு தவணைகளாக வழங்கப்படும் எனவும், பயனாளிகளே இதனை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்