Published : 02,Sep 2022 09:04 AM

கரூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

Karu-Sexual-harassment-of-girl-students-Govt-school-teacher-arrested-in-Pokso

தோகைமலை பொம்மாநாயக்கன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குண்ணாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஆசிரியர் மருதை (59). இவர் பொம்ம நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார், இவருக்கு திருமணமாகாத நிலையில், தனது சகோதரியின் குடும்பத்துடன் குண்ணாகவுண்டம்பட்டியில் வசித்து வருகிறார்.

image

இந்நிலையில், பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் நடத்தும் இவரிடம் படிக்கும் மாணவ, மாணவிகளை அடித்தும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் பாலியல் தொந்தரவு செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் லாரா ஜேசுராஜ் புகார் கொடுத்துள்ளார்.

image

இதையடுத்து புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு அறிவியல் ஆசிரியர் மருதையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்..

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்